Wednesday, February 24, 2016

Sunday, October 19, 2014

ஜெயா லலிதாவின் சாதனைகளை  யாருமே முறியடிக்க முடியாது
1. முதல் அமைச்சர் பதவியிலிருந்தும்  முதன் முதலில்  இந்தியாவிலே தோற்கடிக்க பட்டவர்
2. கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாமல் புரட்சித் தலைவி என்ற பட்டம் பெற்றவர்  என்ன புரட்சி செய்தார் என்பது  இதுவரை யாருக்குமே விளங்காத  ரகசியம்
3. டான்சி ஊழலுக்காக  முதன் முதலில் சிறை சென்ற முன்னாள் முதல்வர்
4.2006 ல்  அன்றைய அமைச்சர்  கோ,சி.மணி  குற்றம் சாட்ட பெற்ற  ஜெயேந்திரை  சந்தித்ததுப் பற்றி ஒரு அமைச்சர் எப்படி ஒரு குற்றவாளியை  சந்திக்கலாம் என விமர்சனம் செய்தவர்  , ஆனால் எல்லா  தமிழக அமைச்சர்கள்  ஒரு குற்றவாளியான  அவரை எவ்வாறு சந்திக்கின்றார்கள்  என்பது புரியாத புதிர்

5. யாரும்  நீதி  துறை ,அல்லது நீதிபதியை  விமர்சிக்க வேண்டாம் என்று இன்று அறிக்கைவிடும் அவர்  கைதான  உடனே என் இந்த அறிக்கை  விட வில்லை .

6. குற்றம் சாட்டப் பெற்றுள்ள அவருக்கு  நிபந்தனை  ஜாமீன் தன  அளிக்கப் பட்டுள்ளது  , இன்னும் அவர் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளிதான்  ஆனால் நிரபராதி என்று விடுதலை செய்யப் பட்டது போல்  என் இந்த ஆர்பாட்டம்

7. அ.தி.மு.காவிற்கும்  பாரதிய ஜனதா கட்சிக்கும் உள்ள சுமூக உறவு அனைவரும் அறிந்தததே .நீதித் துறையில் .பி.ஜே.பியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம்  சுப்ரீம் கோர்ட் . ஜாமீன் வழங்கியதில் எழுந்துள்ளது . இதன்   எதிரொலி ஜெயாவின் மேல் முறையீட்டில்
ஒலிக்க  வாய்ப்பு  உள்ளது  . சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியதின் மூலம்  ஒரு குற்றவாளிக்கு  நிழல்  அரசாங்கம் நடத்த சந்தர்ப்பம்  அளித்ததாக தோன்றுகின்றது   

Wednesday, October 1, 2014

கர்நாடக கோர்ட் சரித்திரத்திலே இல்லாத ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறது . கோர்ட்டின் தீர்ப்பை விமர்சிப்பது என்பது கோர்ட்டை அவமதிக்கும் செயலாக இருந்த போதும் இது பற்றி என்னுடைய கருத்தை சொல்ல விரும்பிகிறேன் . இந்த வழக்கு கடந்த 15 வருடங்களாக பல முறை வாயிதா கேட்டு வேண்டுமென்றே இழுக்கப் பட்ட ஒன்றாகும் . . தான் ஊழல் செய்யவில்லை என்று ஜெயலலிதா எண்ணியிருந்தால் , முறையாக விரைவில் இந்த கேசை முடித்து விட்டு தான் நிரபராதி என்று நிரூபித்திருக்கலாம் , அதற்கு மாறாக சாட்சிகளை களைக்கும் செயலில் இடுபட்டதின் காரணமாக வழக்கு தமிழ் நாட்டில் நடந்தால் நேர்மையாக நடக்காது என்ற காரணத்தால் வழக்கு மாற்றப் பட்டது . ஜெயலலிதா நடிக்கும் வாய்ப்பு இல்லாத காரணத்தால் எம்.ஜி.ஆரால் அரசியலில் இழுக்கப் பட்டவர் அவருக்கு பின்னர் கட்சிப் பொறுப்பு ஏற்று வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வரானார் . அப்படு இருக்கும் போது 3000 ஏக்கர் நிலம் பையாநூர் நிலம் பங்களா , ஆந்திராவில் , திராட்சை தோட்டம் , கிலோ கணக்கில் தங்க நகை , 2000 மேற்பட்ட பட்டுப் புடவைகள் , வைரங்கள் 1000 உயர்ந்த ரக காலணிகள் எவ்விதம் வந்தது என்பதுதான் இந்த வழக்கு . அரசியலில் யார் ஊழல் செய்தாலும் அவர்கள் நிச்சையமாக தண்டிக்க பட வேண்டியர்களே. என்பதிற்கு மாற்றுக் கருத்தில்லை அது ஜெயா வாக இருந்தாலும் அல்லது கருணாநிதி , ராஜா , கனிமொழி யாராக இருந்தாலும் சட்டம் தன கடமையைச் செய்யும் ஏனென்றால் சட்டம் தனி மனிதர்களை விட மிகப் பெரியது . ஜெயா , தீர்ப்பை மதிப்பவர் என்றால் என்ன செய்திருக்க வேண்டும் , இதுவே முடிவான தீர்ப்பு அல்ல , இதற்கு மேல் , உயர் நீதிமன்றம் , உச்ச நீதி மன்றம் உள்ளது. சட்டப் படி நான் நிரபராதி என்று நிரூபித்து வெளி வருவேன் அது வரை சட்டத்திற்குப் புறம்பான வன்முறைகளில் யாரும் ஈடு பட வேண்டாம் , தன ஆதரவளர்களுக்கு அறிவுருத்திக்க வேண்டும் . ஏன்அதை செய்யவில்லை , இந்த வன்முறைகளினால் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கும் பொருள் நஷ்டத்திற்கு, சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததற்கும் யார் பொறுப்பேற்பது ,போராட்டம் செய்பவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் , ஜெயா ஊழல் செய்யவில்லை என்றா, அதிக பட்ச தண்டனை கொடுத்தார்கள் என்றா , எதை சொல்ல விரும்பிகிறார்கள் . அதை விட வேடிக்கை என்ன வென்றால் , அ.தி.மு.ககட்சியின் கூட்டணியிலிருக்கும் ஒரு கட்சித் தலைவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராக உள்ளார் அவர் தலைமையில் தீர்ப்பை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள் , அதில் தீர்ப்புச் சொன்ன நீதிபதியை விமர்சித்து போஸ்டர்கள் ஓட்டப் பட்டிருந்தது தீர்ப்பைக் கூட விமர்சிக்கலாம் , தீர்ப்பு எழுதிய நீதிபதியை விமர்சிக்கும் உரிமை அவர்களுக்கு யார் கொடுத்தது . கேட்டால் அம்மா எங்கள் சினிமா உலகிற்கு ஏராளமான நன்மைகள் செய்திருக்கிறார்கள் , எங்களின் உணர்வுகளைக் காட்டத்தான் இந்தப் போராட்டம் என்று சொல்கிறார்கள் , சரி , கருணாநிதி ஆட்சியில் இருந்த போது ஏராளமான சலுகைகளை திரைத்துறைக்கு வழங்கினாரே அவர் எதிர் கட்சியாக இருந்த போது அவரைக் கைது செய்த போது இந்த உணர்வு எங்கே போனது .பல கோடி ரூபாய் பணம் செலவழித்து படம் எடுப்பவர்களுக்கு ஆளும் கட்சியின் தயவு தேவைத்தான் , . தண்ணீரிலிருந்து அனைத்து பொருட்களிலும் அம்மா படத்தை இப்போது அதிலிருந்து எடுக்க எவ்வளவு செலவாகும் இதை யார் பணத்தில் செலவழிக்கப் போகிறார்கள் . 60 கோடி ஊழலுக்கு 100 கோடி அபராதமா என ஒரு கேள்வி , கைப்பற்றிய சொத்துகளின் தற்போதைய மதிப்பு 5 மடங்கு அதிகமாகும் அதன் படி பார்த்தல் சொத்தின் மதிப்பு 300 கோடியாகும் அதன் படி பார்த்தால் அபராதம் சரியான ஒன்றே ஆகும் . முடிவாக ஒன்று , அரசியலில் ஊழல் செய்யாத அரசியல் தலைவர்கள் ஒருவருமே இல்லை ஆகவே இந்ததீர்ப்பு ஜெயாவின் ஆணவத்திற்கும் , அகம்பாவத்திற்கும் , எதேட்ச்சை அதிகாரத்திற்கும் கிடைத்திட்ட தண்டனையாகத்தான் கருத வேண்டும்